முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (77) உடல்நலக்குறைவால் காலமானார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதிக்கும் இவருக்கும் பிறந்த மு.க.முத்து, தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக அறிமுகமானவர். 1970களில் “பூக்காரி”, “பிள்ளையோ பிள்ளை”, “அணையா விளக்கு”, “சமையல்காரன்” போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து, சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு திமுகவினர் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version