மிழக மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம வாய்ப்பு உரிமையை பாதிக்கும் வகையில் பின்வாசல் நியமனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். தற்காலிக நியமனங்களை நிரந்தரமாக்குவது, போட்டித் தேர்வுக்காக காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.

மேலும், தற்காலிக நியமனம் என்பதைக் அறிந்தே பணியில் சேர்ந்தவர்கள் பின்னர் பணி நிரந்தரம் கோர முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் விரும்பினால் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கான வழக்கமான ஆட்சேர்ப்பு தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன், காலவரம்பின்றி தற்காலிக நியமனங்களை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறை என்பதால், மாவட்ட நீதித்துறையில் அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்த நீதித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version