பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரிய முறையில் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதாவது தமிழர்களின் பாரம்பரியமான, வாடி வாசலில் சீறிப்பாய்ந்து அனல் பறக்க வரும் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி விளையாடும் விளையாட்டு என்பது மதுரை மண்ணிற்கான அடையாளமாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதியிலும், 15ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற பாலமேடு பகுதியிலும் கோலாகலமாக நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார். இதற்காக, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு வாடிவாசல் தூய்மைப்படுத்துதல், மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
