மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவை 8 வாரங்கள் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது..

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது . இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது மற்றும் நெடுஞ்சாலையின் center median-யில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும், ஆனால் தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யப்படவில்லை.

முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையை பராமரிக்க 563.83 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செலவு செய்யவில்லை , மேலும் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக தொகையை தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தாலும் , மாதத்திற்கு 11 கோடி ரூபாய் சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து, பராமரிப்பு பணிக்காக வெறும் 30 லட்சம் மட்டுமே செலவு செய்து வருகின்றது.

இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு முன்பு விசாரிக்கு வந்தது. அப்போது , மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்களை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு இரண்டு வார காலங்களுக்கு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் முன்பு மீண்டும் விசாணைக்கு வந்தது.

தேசிய நெடுஞ் சாலை துறை தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மனு தாக்கல் செய்ய ப்பட்ட வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை பெற்று உள்ளோம் என தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த வாரம் இந்த தேசிய நெடுஞ்சாலையில், விபத்து ஏற்பட்டு தஞ்சாவூர் நீதிபதி , உள்ளிட்டோர் உயிரழந்தனர் என கூறினார்.

அப்போது நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை துறை, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். அதே வேளையில் இந்த நெடுஞ்சாலை யில், குண்டும், குழியான சாலைகளை சீர் படுத்தி மேம்படுத்த வேண்டும். CCTV கேமரா பொறுத் து தல், சாலையின் சில இடங்களை வாகனங்களில் வேக கட்டுபாடு உள்ளிட்ட நவீன முறைகளை கையாண்டு , தொடர் சாலை பராமரிப்பை செயல்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர் .

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version