Close Menu
    What's Hot

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!
    தமிழ்நாடு

    மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!

    Editor web3By Editor web3March 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில்,

    கட்டணமில்லா தங்கும் விடுதிகள்

    முதன்மை அரசு மருத்துவமனைப் பகுதிகளிலேயே, தங்கும் வசதிகளைக் கொண்ட புதிய தூய்மையான இலவசத் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் உள் நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் போதிய தங்கும் வசதி இன்றி தவிப்பதும், தேவையற்ற செலவுகளும் குறைக்கப்படும். மருத்துவமனையிலும் நெரிசல் குறையும்.

    மருத்துவச் சுற்றுலா

    பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் வந்து குவிகின்றனர். இந்தியாவைத் தவிர்த்து ஏனைய பிற நாடுகளுக்கும் மேல்நாட்டவர் மருத்துவச் சுற்றுலாவுக்கென பயணிக்கின்றனர். அவர்களைக் கவரும் வண்ணம், தமிழகத்தின் மையப்பகுதியில் மருத்துவச் சுற்றுலா நகரம் உருவாக்கப்படும்.

    இங்கு ஒரே இடத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து மருத்துவங்களும் உலகத் தரத்தில் அளிக்கும் தலைசிறந்த மருத்துவ வளாகங்கள் உருவாக்கப்படும். இதில் ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாது சித்த மருத்துவம், ஓகம், புள்ளியியல், ஆயுர்வேதம், யுனானி போன்ற மாற்று மருத்துவ வளாகங்களும் அமைக்கப்படும்.

    இங்கு நோயாளிகள் உடன் வரும் உறவினர்களுக்கு 5 நட்சத்திர விடுதிக்கு இணையான தங்கும் விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மருத்துவத்துக்குப் பிறகு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களையும் சுற்றிப் பார்க்க மொழிபெயர்ப்பாளர்களோடு கூடிய சுற்றுலாவிற்கு அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும். இந்த மருத்துவச் சுற்றுலா நகரத்தின் மூலம் அரசுக்கு வருவாயும், நாட்டிற்கு சுற்றுலாத்துறையின் மூலம் அந்நியச் செலாவணியும் பெருகும்.

    திருநங்கை, திருநம்பிகளுக்குத் தனி மருத்துவமனை

    திருநங்கை, திருநம்பிகளின் மனம் மற்றும் உடலியல் சிக்கல்கள் மற்றும் தேவைகள் தனித்துவம் வாய்ந்தவை. இதை கருத்தில் கொண்டு, திருநங்கை. திருநம்பிகளுக்கென திருச்சியில் ஒரு தனி மருத்துவமனை உருவாக்கப்படும்.

    மனவள மருத்துவமனைகள்

    மனம் சார்ந்த சிக்கல்களுக்கான மருத்துவம் என்பது வெளிநாடுகளில் பரவலாக்கப்பட்ட ஒன்று. அதைப்போன்று தமிழகத்திலும் மனவள் மருத்துவமனைகள், நாடாளுமன்ற தொகுதிக்கு ஒன்று என 40 அமைக்கப்படும். மன அழுத்தம், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு மருத்துவம், இயற்கை சார்ந்த சூழலில் அமைக்கப்படும்.

    சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இங்குப் பன்னாட்டளவில் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகளும், உலகத் தரத்திலான பயிற்றுநர்களும் பணியமர்த்தப்படுவார்கள். விளையாட்டுத் துறையில் உயர் ஆராய்ச்சி படிப்புகளும் மேற்கொள்ளப்படும். இந்தப் பல்கலைக்கழகம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைவிட சிறப்பான கட்டமைப்பைக் கொண்டதாக அமைக்கப்படும்.

    election Medical Tourism ntk Seeman tamilnadu TN Election 2026 Transgender
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆடு, மாடு, கழுதை வளர்த்தல்!. படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை!. சீமான் தேர்தல் வாக்குறுதி!.
    Next Article அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?
    Editor web3
    • Website

    Related Posts

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    உலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    Trending Posts

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.