Close Menu
    What's Hot

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆடு, மாடு, கழுதை வளர்த்தல்!. படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை!. சீமான் தேர்தல் வாக்குறுதி!.
    தமிழ்நாடு

    ஆடு, மாடு, கழுதை வளர்த்தல்!. படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை!. சீமான் தேர்தல் வாக்குறுதி!.

    Editor web3By Editor web3March 19, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8057712 seeman1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கால்நடைப் பண்ணை: ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ ஆயிரம் குறுக்கம் பரப்பளவில் தருந்த இடம் அரசால் தேர்வு செய்யப்பட்டு, அங்கே புதிதாகக் கால்நடை மேம்பாட்டுப் பண்ணைகள் அமைக்கப்படும். அதில் காங்கேயம், தார்பார்க்கர், சிவப்புப்பசகி, சாகிர்வால், உம்பளச்சேரி, புளியங்குளம் பட்டிமாடு, தேனி மலைமாடு, பர்கூர் மலைமாடு, சிந்தி, கிர் உள்ளிட்ட நமது பரம்பரை மாடுகள், ஆடுகள் மட்டும் வளர்க்கப்படும். வெளிநாட்டு Jersey வகை மாடுகள் அனைத்தும் தடை செய்யப்படும்.

    நமது பரம்பரை மாடுகளைக் கொண்டு உருவாக்கப்படும் பண்ணையில் இருந்து பால் (A2), பால்கோவா, தயிர், வெண்ணெய், மோர், பால்பொருள் இனிப்பு வகைகள் ஆகியவை உருவாக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். அவற்றில் நம் தேவைக்குப் போக மீதமுள்ளவை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

    நாட்டு மாடு – பால் சந்தைப் பெருக்கம்

    தமிழ்நாட்டில் பாலின் சந்தை மதிப்பு சற்றொப்ப 3.5 இலக்கம் கோடி. ஆனால் வருமானத்தைப் பெருக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த அரசுகள் உயிரைக் குடிக்கும் மது விற்பனையை மட்டுமே சார்ந்திருக்கிறது.

    பால் வகைகளின் பேய் (Devil in the milk) எனப்படக்கூடிய Jersey வகை கலப்பின மாடுகளின் பால் (A1) முழுதாகத் தடை செய்யப்படும். மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட மாடுகளில் இருந்து பெறப்படும் இந்தப் பால் மாந்த குலத்திற்கு எதிரானது.

    ஒவ்வாமை, சர்க்கரை நோய், பெண்கள் சிறு அகவையில் பூப்பெய்தல், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுதல் உள்ளிட்ட நோய்களை எளிதாக உண்டாக்கி வருகிறது. பல்வேறு புதிய வகை நோய்களை உருவாக்கக்கூடியது. அமெரிக்கா, சர்க்கரை நோய்க்கான ஊசி மருந்தை மட்டுமே விற்று பல இலக்கம் (இலட்சம்) கோடி வருமானம் ஈட்டுகிறது.

    America New Zeeland, Australia உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் Jersey வகை மாட்டுப்பாலைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து A2 என்ற நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். எளிதில் செரிக்கக்கூடிய பாலைக் கொடுக்கும் பரம்பரை மாட்டின் விந்தணுக்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

    எனவேதான் Jersey வகை மாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்கின்றோம். மாற்றாக, நமது பரம்பரை மாடுகளைத் திட்டமிட்டுப் பெருக்குவோம்.

    கழுதை வளர்ப்பு

    கழுதை வளர்ப்பு என்பது நகைப்பிற்குரிய செயல் அல்ல, அது மிகச்சிறந்த பொருளாதார வளம் மிக்கது. எகிப்திய அரசி கிளியோபாட்ரா தனது அழகைப் பராமரிக்கக் கழுதைப் பாலில் குளித்தார் என்பது வரலாறு.

    உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பாலாடைக்கட்டி (Cheese) கழுதைப் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. செர்பியா போன்ற நாடுகளில் இது பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது. உலகச் சந்தையில் இதற்கு 60 விழுக்காடு தேவை உள்ளது. எனவே கழுதை வளர்ப்பிலும் அரசு கவனம் செலுத்தும்.

    நெசவுத் தொழில்

    ஒரு கைத்தறி சேலையை நெசவு செய்வது என்பது ஏராளமான கைமுறை செயல்களை உள்ளடக்கியது, ஒரு சேலைக்கு பெரும்பாலும் 15,000 முதல் 25,000 வரை மிதி அசைவுகள் செய்ய வேண்டியதிருக்கும்.

    பல்லாயிரக்கணக்கான குறுக்கம் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படும். இதனை “வெள்ளைத் தங்கம்” என்று குறிப்பிடுகிறோம்.

    பருத்தி விதையிலிருந்து பருத்திப் பால், எண்ணெய் மற்றும் புண்ணாக்கு ஆகியவை தயாரிக்கப்படும்.

    காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைகளிலிருந்து பெறப்படும் இயற்கைச் சாயங்கள் ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும்.

    பருத்தியிலிருந்து நூல் நூற்பது மற்றும் ஆடை தயாரிப்பது ஆகிய பணிகள் அரசுப் பணியாக மாற்றப்படும். ஏற்கனவே உள்ள நெசவாளர்களின் திறனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை அரசே கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும்.

    படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் அரசு வேலை

    நாம் தமிழர் கட்சி படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை, இனிப் படிக்காதவர் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அடுத்த வேலை என்ற முழக்கத்தை முன் வைக்கிறது.

    அந்தந்தப் பகுதியில் நன்கு படித்த இளைஞர்கள், விற்பனைப் பொறுப்பாளர்கள் வேலைகளில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்று தமிழகத்தில் விளையும் காய்கறிகள் அனைத்தும் எப்படி இயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை ஒளிப்படக் காணொலிக் காட்சிகள் மூலம் விளக்கி விற்பனையைப் பெருக்கப் பணிக்கப்படுவார்கள்.

    இதன் மூலமாகத் தமிழகம் முழுவதும் 15 இலக்கத்திற்கும் (இலட்சத்திற்கும்) மேற்பட்ட படித்த, படிக்காத இளைய தலைமுறைக்கு அரசு வேலைகள் வழங்கப்படும். படித்தவர்களுக்குப் பண்ணை மேலாண்மை, நிருவாகம், கணினிமயப்படுத்துவது மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு விற்பனை நிகராளர் வேலைகள் வழங்கப்படும். படிக்காதவர்களுக்குக் கால்நடைகளை வளர்த்தல், பேணிக்காத்தல், கண்காணித்தல் உள்ளிட்ட வேலைகள் வழங்கப்படும்.

    cattle donkeys goats Government jobs ntk Seeman TN Election 2026
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை!. தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளை!. சீமான் அதிரடி!
    Next Article மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.