மேகதாது விவகாரத்தில் வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

கரூரில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில், மேகதாது அணை வழக்கில் தமிழ்நாட்டின் மனு எப்போது ரத்து செய்யப்பட்டது, அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள், ஏன் சரியாக வாதாடவில்லை என்ற கேள்விகளை எழுப்பினார். தீய சக்தியைத் திருத்த முடியாது எனக் கூறிய அவர், இடைத்தேர்தலில் மக்கள் அவர்களை வெளுத்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், நீங்களும் ஏன் பதில் பேசவில்லை என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்தார். வெறும் வார்த்தை மோதல்களில் ஈடுபடுவதை விட, மாநிலத்தின் உரிமைகளைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதற்குத் தேவையான பணிகளைச் செய்வதே சிறந்தது என்று முதலமைச்சர் பதிலளித்தார்.

மேலும், “தொட்டுப்பார்.. சீண்டிப்பார்” என்பது போன்ற  பேச்சுகளால் மாநிலத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதை  சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், மாநிலத்தின் நீராதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், வெறும் மேடைப் பேச்சுகளைத் தாண்டி, நடைமுறைச் செயல்பாடுகளே மேகதாது விவகாரத்திற்குத் தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, மாநில நலன் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version