ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பால் வளத்துறை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால் கொள்முதல், விநியோகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் விஜய் எழுப்பியுள்ளார்.
தனியாருக்கு இணையாக பால் கொள்முதல் செய்வது, பால் கொள்முதலில் உள்ள இடர்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகப்படுத்தக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,
ஆவின் பால் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும், தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்
இதற்கு முன் இருந்த குறைபாடுகளை முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
