இந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து மூத்த அரசியல் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்காக இதுவரை சட்டமன்றத் தேர்தலில் 9 முறை வெற்றி கொண்ட மூத்த அரசியல் அமைச்சர் ஆவார். மேலும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரையில் போக்குவரத்து துறை மந்திரியாக அவர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதோடு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பள்ளிக்கல்வித்துறையிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு முன்னேற்றத் துறையிலும் அமைச்சராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தற்பொழுது தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும், இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கூடிய விரைவிலேயே அவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போகிறார் என்றும் கூடுதலாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பின்னர் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version