ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை ஒட்டி 26ம் தேதி சென்னையில் இருந்து இயக்க கூடிய தினசரி 2,092 பேருந்துகளுடன் 450 சிறப்பு பேருந்துகளும், 27ம் தேதி 696 சிறப்பு பேருந்துகளும், 29ம் தேதி 194 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த 3 நாட்களில் 3,80,800 பயணிகள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 1,310 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டன. ஆயுத பூஜைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பேருந்துகளின் விவரம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
ஆயுத பூஜை விடுமுறைக்கு ஒட்டு மொத்தமாக சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து அரசு பேருந்துகளில் 50,913 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 26,013 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.