திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காணாமல் போன டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், ஆம்பூரில் உள்ள டீக்கடை ஒன்றியில் பணியாற்றி வந்துள்லார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு சென்ற அவர், 3 நாட்களாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியதோடு, காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பெரியங்குப்பம் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இளங்கோவனின் சடலம் மிதந்துள்ளது. தகவலின் பேரில் அங்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்நிலைய போலீசார், மற்றும் ஆம்பூர் தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளங்கோவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
