மிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,  ”மேகதாது அணை விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உறுதியாக உள்ளது என நம்புகிறோம்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவதாக முடிவு எடுத்தால், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

நாகர்கோவிலில் நடந்துள்ள கைதி சபரிவர்மனின் உயிரிழப்பு பெரும் துயரமானது.  உடல்கூறாய்வு அறிக்கை அவரது உடம்பில் காயங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சபரிவர்மனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

தவெகவிலிருந்தும் சிலரை விலை கொடுத்து வாங்க முயற்சி நடப்பதாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். அதேபோல தவெக மீது திமுக அதிமுக கட்சிகள் குற்றம் சாட்டை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது. இந்தப் போக்கு ஜனநாயகத்திற்கு தீங்கிழைப்பதாக இருக்கிறது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version