Close Menu
    What's Hot

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ரிப்பன் மாளிகையில் பரபரப்பு; 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
    தமிழ்நாடு

    தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ரிப்பன் மாளிகையில் பரபரப்பு; 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksOctober 10, 2025Updated:October 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sanitation workers Protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், மாநகராட்சி மேயருடன் தூய்மை பணியாளர்கள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

    அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம் உட்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6ஆவது மண்டலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 71 நாட்களாக பணியில்லாமல் இருப்பதாக கூறி இன்று சென்னை ரிப்பன் மாளிகை முன்பு, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அது மிகப்பெரிய பேசுபொருளானது. அதன் காரணமாக போராட்டம் பெரிய அளவில் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டு வருகின்றனர். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால், கைது செய்வதற்காக 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Police deployment protest Ripon Building Sanitation workers Workers' Rights Movement உழைப்போர் உரிமை இயக்கம் தூய்மை பணியாளர்கள் போராட்டம் போலீஸார் குவிப்பு ரிப்பன் மாளிகை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க முடியாது – உச்சநீதிமன்றம் மறுப்பு
    Next Article தற்காலிக போர் நிறுத்தம்; பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு – ஹமாஸ், இஸ்ரேல் ஒப்புதல்
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.