Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடுங்குளிரிலும் கலையாமல் தொடரும் செவிலியர்கள் போராட்டம்
    தமிழ்நாடு

    கடுங்குளிரிலும் கலையாமல் தொடரும் செவிலியர்கள் போராட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nurse
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ’சம வேலைக்கு சம ஊதியம்’ உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 ஆம் தேதி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தங்களது உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இதுதொடர்பாக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

    தொடர்ந்து, அன்றிரவு, பேருந்து நிலையத்திலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து, டிச.19 ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், போராட்டம் தீவிரமடைந்தது.

    மேலும், சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு வர முடியாத செவிலியர்கள் தங்கள் மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்ததால், தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, ஊரப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மண்டபத்திலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு வெளியேறிய செவிலியர்கள், செய்வதறியாது ஜிஎஸ்டி சாலையில் நடந்து சென்று கூடுவாஞ்சேரியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களின் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரியும், அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

    செவிலியர்களின் கோரிக்கைகள்

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு ’சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். கரோனா காலகட்டத்தில் பணி செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

    செவிலியர்களுக்கு 7,14,20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும். எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு. கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18,000 ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தவறிழைத்துள்ளது – ப. சிதம்பரம்
    Next Article U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்ற பாகிஸ்தான்
    Editor TN Talks

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.