Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை: ஆம்ஸ்ட்ராங் சகோதரர்
    தமிழ்நாடு

    ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை: ஆம்ஸ்ட்ராங் சகோதரர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025Updated:November 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ngn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்ப வைத்து விட்டதாக, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, வழக்கு கோப்புகளை மாநில காவல்துறை சிபிஐ’யிடம் ஒப்படைக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் வாதிட்டனர்.

    இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழக காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

    இந்த சூழலில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்றும் வாதிட்டார். மேலும், சமீபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படும் நாகேந்திரன் இறக்கவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்ப வைத்து விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அஸ்வத்தாமன், அரிகரன் மற்றும் அஞ்சலை ஆகிய மூவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நவம்பர் 10 ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்துள்ளார். மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 11 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு
    Next Article 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    June 21, 2026

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.