நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு நடைபெற்று முடிந்தது.
MBBS, BDS ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற இந்தாண்டுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததது உறுதி செய்யப்பட்டதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) மறுதேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நீட் மறுதேர்வு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 307 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் மறுதேர்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த தேர்வில் இயற்பியல் வினாக்கள் சற்று கடினமானதாக இருந்ததாகவும், மற்ற பாடப்பிரிவுகள் எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

