சட்டவிரோதமாக கள் இறக்கி குடித்து அதை உணவு என பொய் பிரச்சாரம் செய்யும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொருளாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான SM செல்லத்துரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கி குடித்து அதை உணவு என பொய் பிரச்சாரம் செய்யும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த பானங்களில் 10 முதல் 12 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கிறது எனவே அது மதுவுக்கு இணையாக போதை உள்ள ஒரு போதை பொருள் என்றும், இதனை சிறு குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் மாணவ மாணவியருக்கும் கொடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.