சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட துறைகளில், சுமார் 5,500-க்கும் அதிகமான நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பணி நேரம் காலை 10:10 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆகும்.

இருப்பினும், சமீபகாலமாக பணியாளர்கள் பலர் தாமதமாக பணிக்கு வருவதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் தினசரி காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துவிடுகிறார்.

இதனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் அனைவரும் தாமதத்தைத் தவிர்த்து, சரியாக காலை 10 மணிக்கே பணிக்கு ஆஜராக வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தரப்பில் துறை வாரியாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த மே 10-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் பதவியில் முழு ஈடுபட்டுடன் பணி செய்து வரும் அவர், தினமும்  மற்ற அரசு ஊழியர்களைப் போன்று முதல்வர் விஜய்யும் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருந்து பணிகளை செய்து வருவது தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version