சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தேசிய கூட்டணியான இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 8) தலைநகர் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற முடிந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக, ஐ.யூ.எம்.எல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்தநிலையில் கூட்டத்தின் முடிவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 23 அரசியல் காட்சிகள் பங்கேற்றதாகவும், காங்கிரஸ் தலைமையில் எந்தவிதமான சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.
2 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டத்தை கூட்டி உள்ளதாக ஆலோசிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வைகோ கூறினார். இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அது குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என வைகோ தெரிவித்தார்.
