குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளதால் அதனை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்னையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
