தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாத்திரமல்ல தமிழ்நாட்டிற்கு நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகின்ற நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக புறப்பட்டு செல்கிறோம்

விட்டுக் கொடுத்துப் போனவர்கள் என்றைக்கும் கெட்டுப் போனதில்லை என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் பங்காளி சண்டை தான் “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்” என பொதுக் குழுவில் சொல்லிவிட்டேன். நான் பழசையே நினைத்து விட்டு கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்பதற்காக பொதுநோக்கத்தோடு நாங்கள் விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் ஆட்சி கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version