சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும், சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.8அதிகரித்து. ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
