மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இன்று (17.05.2025) மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தா பாட்டாளி என்பவர் தனது மாடை அழைத்து வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாடு, உரிமையாளரான பாட்டாளியை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
