Close Menu
    What's Hot

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொலைபேசியை ஒட்டுகேட்பது அனுமதிக்கத் தக்கதல்ல – நீதிமன்றம்
    தமிழ்நாடு

    தொலைபேசியை ஒட்டுகேட்பது அனுமதிக்கத் தக்கதல்ல – நீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1200 675 22517002 thumbnail 16x9 phonetap aspera
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்ட சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது என்பதால், குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல எனக் கூறி, கிஷோரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    மேலும், பொது பாதுகாப்பு மற்றும் பொது அவசரம் காரணாமாக மட்டும் தனி நபர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது அமைதி, குற்றசெயல்களை தடுப்பது போன்ற நிகழ்வுகளில் மட்டும் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதியளிக்க முடியும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

    இந்த வழக்கில், பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதும் சம்பந்தப்படவில்லை எனக் கூறி, உள்துறை அமைச்சக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -வைகோ
    Next Article சிவகங்கை படுகொலை – தவெக ஆர்ப்பாட்ட தேதி, இடம் மாற்றம்..
    Editor TN Talks

    Related Posts

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    June 20, 2026

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    June 20, 2026

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.