Close Menu
    What's Hot

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பட்டியலினத்தைச் சேர்ந்த புகார்தாரர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம்.. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி..
    தமிழ்நாடு

    பட்டியலினத்தைச் சேர்ந்த புகார்தாரர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம்.. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி..

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    22 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் whatsapp குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக அளித்த புகார் மீது நொளம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், புகார் அளிக்கச் சென்ற தன்னை, காவல் நிலைய அதிகாரி அவமானப்படுத்தியதாகக் கூறி, வானமாமலை, தேசிய பட்டியலின ஆணையத்துக்கு மனு அனுப்பினார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆணையம், சென்னை காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    அதன் அடிப்படையில் நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வானமாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலமனுவில், மனுதாரர் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனத் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில், புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல் துறை தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். காவல் ஆய்வாளர் முன் அமர புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெள்ளை சட்டையுடன் வந்தால் சிவப்பு கம்பள வரவேற்பு தருவீர்களா? அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்க மாட்டீர்களா? அவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை எண்ண மாட்டீர்களா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, நீங்கள் சொல்பவர் தான் இருக்கையில் அமர வேண்டும். மற்றவர்கள் அமரக்கூடாது எனக் கூற நீங்கள் யார்? அரசு அலுவலகம் அனைத்து மக்களுக்குமானது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அப்போது, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் ஸ்ரீகாந்த் கைது… போதைப் பொருள் பயன்படுத்தியது அம்பலம்… அதிமுக பிரமுகரும் உடந்தை…
    Next Article பெரியார், அண்ணா குறித்த வீடியோவை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது… கடும் கண்டனம் தெரிவிப்பதாக அஇஅதிமுக அறிக்கை..
    Editor TN Talks

    Related Posts

    என்னையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமா தான் பிரசவம் பார்த்தார்!. சீமான் பதிலடி!.

    December 27, 2025

    என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்

    December 27, 2025

    விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.