Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேச தடை
    தமிழ்நாடு

    பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேச தடை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1616881 chennai 05
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க யூ டியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த 2019 ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், 1கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    அந்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி நக்கீரன் யூடியூப், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான், உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும்,
    அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தனர்.

    மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
    குமரேஷ் பாபு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் ஆகியோரை தொடர்புபடுத்தி அவதூறு கருத்த்துக்களை தெரிவிக்க நக்கீரன் கோபால், வா.புகழேந்தி மற்றும் நக்கீரன் யூடியூப், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான், உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகவின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்
    Next Article இதற்காக பணியிட மாற்றமா?
    Editor TN Talks

    Related Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.