Close Menu
    What's Hot

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாலிடெக்னிக் தேர்வு மோசடி விவகாரம்!. புழல் ரகுபதி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
    தமிழ்நாடு

    பாலிடெக்னிக் தேர்வு மோசடி விவகாரம்!. புழல் ரகுபதி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    Editor web3By Editor web3June 23, 2026Updated:June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ponneri ED raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை புழல் உள்ளிட்ட தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தேர்வு மோசடி மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்குத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையைத் தொடங்கினர்.

    இந்த மாநிலம் தழுவிய சோதனையின் ஒரு பகுதியாக, சென்னை புழலை அடுத்த புத்தகரம், சிவாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ரகுபதி என்பவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். 3 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோதனை நடைபெறும் ரகுபதியின் வீட்டைச் சுற்றி, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை  வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தற்போது ரகுபதியின் வீட்டில் உள்ள முக்கிய சொத்து ஆவணங்கள், வங்கிப் கணக்கு விவரங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். .

    ED Raid Polytechnic exam fraud case puzhal tamilnadu ED raid
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் சூடுபிடிப்பு: ‘ஒரே பிரசவத்தில் 6 துரோகிகள்’..!! ஷிண்டே குறித்து சஞ்சய் ராவத்தின் சர்ச்சை கருத்து..!!
    Next Article சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    June 23, 2026

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    June 23, 2026

    ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!

    சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!

    பாலிடெக்னிக் தேர்வு மோசடி விவகாரம்!. புழல் ரகுபதி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.