Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் ஜூலை 17-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!. அரசாணை வெளியீடு!.
    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஜூலை 17-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!. அரசாணை வெளியீடு!.

    Editor web3By Editor web3March 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil Nadu Population census
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் வீடுகள் பட்டியலிடும் பணிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையவழியில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய-கணக்கெடுப்பு’ (Self-Enumeration) முறை வருகிற ஜூலை 17 அன்று தொடங்கி ஜூலை 31  வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது.

    சுய-கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, களப்பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் ‘வீடுகள் பட்டியலிடும் பணி’ (House Listing Operations) வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை 30 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இந்த முதற்கட்ட பணிகள் இந்தியா முழுவதும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான தேதிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கணக்கெடுப்புப் பணிக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் 33 கேள்விகள் அடங்கிய வினாப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் வீட்டின் எண், கட்டிடம் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், குடும்பத் தலைவரின் விவரங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பயன்படுத்தப்படும் சமையல் எரிபொருள், வீட்டில் உள்ள வாகனங்கள் (மிதிவண்டி, கார், இருசக்கர வாகனம்), இணையதள வசதி மற்றும் பயன்படுத்தும் உணவு தானியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தொடர்புக்கு மட்டும் பொதுமக்களின் கைபேசி எண்களும் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்!. புதிய ஆளுநர் யார்?
    Next Article தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.