வரும் 23ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடல் மைதானத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், திடீரென சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை பாஜகவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
முன்பே வெளியான தகவலின்படி, என்.டி.ஏ. கூட்டணியை இறுதிசெய்து, பிரதமர் மோடி பொதுகூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
