டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL-2 , FL-3 கடைகளின் அன்றாட வருவாய் பதினைந்து கோடியில் இருந்து 27 கோடி வரை அதிகரித்துள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது.

 

முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்றதும் வழிபாட்டுத் தலங்கள் , கல்வி நிலையங்கள் , பேருந்து நிறுத்தங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

 

மேலும் FL1 கடைகள்எனப்படும்டாஸ்மாக் & எலைட்டாஸ்மாக்கடைகள் இரவு 10:00 மணிக்குள் கண்டிப்பாக மூடப்படவேண்டும்.

FL2 & FL3 கடைகள் (பார் & கிளப்/ஹோட்டல்பார்கள்)முறையேஇரவு 10:00 மணி மற்றும் நள்ளிரவு 12:00 மணிக்குள் ஒட்டுமொத்தமாக மூடப்படவேண்டும் என சென்னை காவல் துறை ஆணையரும் உத்தரவிட்டிருந்தார்.

 

முதலமைச்சரின் ஆணையின் பேரில், மொத்தம் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில்513 கடைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன.

 

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 69 மதுக்கடைகளும் ,தூத்துக்குடி மாவட்டத்தில் 63 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

 

தமிழக அரசு மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதில் 650 மதுக்கடைகள் பார் வசதியுடன் கூடிய மதுக்கடைகள் ஆகும்.

 

இந்த நிலையில் அரசு உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள இடங்கள் அருகே செயல்படும் பகுதிகளில் உள்ள FL – 2 , FL – 3கடைகளில் வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

FL – 2 , FL – 3 கடைகளின் அன்றாட வருவாய் பதினைந்து கோடியில் இருந்து 27 கோடி வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தமிழகத்தில் மொத்தம் 1460 FL2 , FL3 மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில், புதிய அரசு அமைந்த பிறகு FL – 2 , FL – 3 கடைகளை புதிதாக திறக்க இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version