கட்டுமானப் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், வீடு கட்டுபவர்கள், கட்டுமான தொழிலை நம்பி உள்ளவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த கல்குவாரிகளில் தற்போது சில குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளநிலையில், குறிப்பிட்ட குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கனிமவளத்துறை மற்றும் தமிழக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள், மாநிலத்தின் பல பகுதிகளில் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலை உள்ளிட்ட காரணங்களால் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன்படி டன் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட ¾ இன்ச் ஜல்லி ரூ.150 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் டன்னுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.800-ஐ எட்டியுள்ளது. பூச்சு வேலைகளுக்குப் பயன்படும் பி.சாண்ட் ரூ.900 வரை உயர்ந்துள்ளதுடன், மூலப்பொருட்களின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.600 வரையும், ஒரு லோடுக்கு ரூ.2,000 வரையும் அதிகரித்துள்ளது.

கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வால் வீடு கட்டுவோர் மற்றும் கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் கடும் கலக்கமடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version