முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 25) கன்னியாகுமரி சென்றார். நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில் பங்கேற்ற அவர், மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று 6 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு, அவர்கள் குறித்த இறுதித் தகவல் கிடைக்கும் வரை அல்லது அரசு நிவாரணம் வந்து சேரும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இது மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளில் பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.20கோடியில் புதிய திட்டம். ரூ.25கோடியில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்.

குளச்சல் நகராட்சி, மண்டைக்காடு பேரூராட்சியில் AVM கால்வாய் ரூ.1.20கோடியில் புனரமைக்கப்படும்.

களியக்காவிளை – குமரி சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ரூ.9கோடியில் சாலை அகலப்படுத்தப்படும்.

கல்குளம் வட்டம் தூய மரியா பசிலிக்கா தேவாலயம் ரூ.2 கோடியில் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்.

மீனவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் கல்வி, திருமண உதவி தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version