கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகளை 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விருதுநகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வத்திராயிருப்பு பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிப்பை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பிளவக்கல் அணையில் சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், செல்பி பாயிண்ட் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது