தமிழக அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கிள்ளியூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ராஜேஷ் குமார், தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தத் தேர்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த தலைவரான ராஜேஷ் குமார், தற்போதுள்ள அரசியல் சூழலில் தவெக-வுடன் இணைந்து செயல்படுவது மற்றும் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசுக்கான அடுத்தகட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version