சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும், கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
