Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவில் சீட் மோதல்!. அடுத்தடுத்து விலகிய நிர்வாகிகள்!. ஸ்டாலின் அதிர்ச்சி!
    தமிழ்நாடு

    திமுகவில் சீட் மோதல்!. அடுத்தடுத்து விலகிய நிர்வாகிகள்!. ஸ்டாலின் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3April 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Resign dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் வரிசையாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சென்னை தி.நகர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஜெ. கருணாநிதி, தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, அவர் வகித்து வந்த திமுக பகுதிச் செயலாளர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அவருக்கு சீட் மறுக்கப்படக் காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது ஆதரவாளர்கள் தலைமைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

    இதேபோல், வேலூர் மாவட்டத்திலும் திமுகவிற்குள்ளே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி-யின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், தனக்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தால் பதவி விலகுவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் திமுகவில் இருந்து பதவி விலகியுள்ளார்.

    இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ பி.என்.பி. இன்பசேகரன், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இணையப் போவதாக தகவல்கள்  பரவி வருகின்றன. ஏற்கனவே அதிமுகவில் இத்தகைய விலகல்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது திமுகவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ விமானம்!. 29 பேர் பலியான சோகம்!.
    Next Article ஏப்ரல் 1!. முட்டாள்கள் தினம் உருவானது எப்படி?.
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    June 21, 2026

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.