காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்த வேலூர் பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டு மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் அவற்றை நிறைவேற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்வபெருந்தகை, திமுகவின் B டீம் ஆக செங்கோட்டையன் செயல்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு, அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை, அதில் தலையிட விரும்பவில்லை. இருந்தாலும் திமுகவின் பி.டீம் என சொல்லி இருப்பதால் பேச விரும்புகிறேன். தமிழ்நாட்டை காட்டிக் கொடுக்காத பி.டீமாக இருந்தால் பரவாயில்லை.
தமிழர்களுக்கு துரோகம் செய்யாத டீமாக இருந்தால் பரவாயில்லை.
தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துகொண்டு B டீமாக யார் யார் இருக்கிறார்களோ. டெல்லியில் இருப்பவர்களுக்கு யார் காவடி தூக்குகிறார்கள், தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள், யார்? செங்கோட்டையன் விட்டுக் கொடுத்தாரா ? எடப்பாடி விட்டுக்கொடுத்தரா?
B- டீம் மற்றும் சி டீம் எல்லாம் எதை சார்ந்து இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை, ஜிஎஸ்டியில் கையெழுத்து இடவில்லை, நீட் தேர்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை, மத்திய அரசுக்கு சவால் விட்டு ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அதன்பிறகு ஜிஎஸ்டியில் கையெழுத்திட்டவர், உதய் மின்கட்டத்தில் கையெழுத்து விட்டவர் யார் ? நீட் தேர்வு கொண்டுவந்து தற்கொலைக்கு காரணம் யார் ?. மத்திய அரசுக்கு பல்லக்கு தூக்கி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் யார் என்பது மக்களுக்கு தெரியும்.. தமிழக நலனுக்கு எதிராக b டீம் இருக்கக்கூடாது, தமிழக மக்களுக்கு ஆதரவாக ப. – டீம் மற்றும் சி – டீம் இருந்தாலும் தவறில்லை
நடிகர் அஜித்குமாரின் கருத்துக்கு செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
இதன்பிறகு இதுபோன்று நடக்கக்கூடாது. நடந்ததற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நீதிமன்றம் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், SIR தேவையில்லாதது இது மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு எல்லாம் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உயிர் இல்லாதவர்களுக்கு வாக்கு இருக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்கு இருக்காது. அவர்களுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் வாக்குகளை எடுத்து விடுவார்கள் இதுதான் பீகார் மாநிலத்தில் நடந்தது. தமிழ்நாட்டிலும் அதுபோன்று நடக்கும்.
இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்டி கருணாநிதி, சந்தவேலூர் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா மணி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
