ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, எம்ஜிஆர் உடன் பயணித்து உறுப்பினராக மட்டுமில்லாமல் செயல் வீரராக பணியாற்றினேன், அடுத்ததாக அம்மா வழியில் இரவு பகலாக அர்ப்பணித்து பணியாற்றினேன்.

இயக்கம் வலுவாக இருக்க அயராமல் எல்லாருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அம்மாவின் மறைவிற்கு பிறகு இயக்கம் உடைய கூடாது என இரு முறை வாய்ப்பு வந்த போதிலும் விட்டுக்கொடுத்தேன். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி என்னை நீக்கி இருக்கிறார். பல்வேறு சூழலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

எம்ஜிஆர் வரலாறு பார்த்தால்  தோல்வியே கண்டதில்லை, புரட்சித் தலைவி ஒரு முறை தோல்வி கண்டாலும் பின்னர் வராலாற்று வெற்றி படைத்தார். ஒரு இயக்கம் என்பது பல கோடி தொண்டர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும், அனைவரையும் ஒருங்கிணைத்தால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் எண்ணம்,  எல்லாரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக சசிக்கலா என்னிடம் ஒரு மணி நேரம் பேசி, பின்னர் இவருக்கும் பரிந்துரை கடிதம் வாங்கி கொடுத்தவன் நான்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எந்த வெற்றியும் எட்டாத நிலையில்  ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை கூறினேன். என் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலையில் தான் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசினேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் யார் காரணம் என சொல்ல வேண்டி இருக்கும், அதனால் தான் பத்து நாட்களில் பேச்சை துவக்க வேண்டும் என கூறினேன். அது கெடுவல்ல, பேச்சை துவக்க வேண்டும் என்றேன். ஆனால் செய்திகளில் கெடு என வந்துவிட்டது. இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இப்படி நான் சொல்வதற்கு காரணம், மீண்டும் அதிமுக புத்துதயிர் பெற்று நல்லாட்சி நடைபெற வேண்டும், அதற்கேற்ப நான் கருத்துகக்ளை தான் தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும், கன்னியாகுமரி இடைத்தெர்தலில்  வாக்குகள் குறைவாக கிடைத்ததால் தான் இந்த கருத்தினை தெரிவித்தேன். ஒத்துழைப்பு அனைவரும் தர வேண்டும் என்று தான் தேவர் ஜெயந்தியில் கலந்து கோண்டேன். தேவருக்கு வழிபாடு நடத்தி விழாவில் கலந்து கொண்டு நீக்கப்பட்டவர்களிடம் பேசியது உண்மை, அவர்களிடமும் நீஙக்ளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பேசினேன். அதற்கு கிடைத்த  பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கபப்ட்டுள்ளேன்.

நான் பி-டீமில் இல்லை, அவர் தான் A1-ல் இருக்கிறார். திமுகவின் A1 ஆக இருக்கிறாரே தவிர நான் பி+டீமாக இல்லை, என்னை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. கருத்துக்கள் சொல்லும் போது மன வேதனை மட்டுமல்ல கண்ணீர் சிந்தும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. 53 ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி  பொறுப்புக்கு வருவதற்கு முன் பணியாற்றியவன் எனக்கு பிறகுதான் இவர் வருகிறார்.

சீனியர் அடிப்படையில் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும், விதிகளை மீறி சர்வதிகாரமாக செயல்பட்டுள்ளார். கழக தொண்டர்களால் பொதுச்ச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதி  அமைத்துள்ளார். தொண்டர்களின் எண்ணங்களையே நான் பிரதிபலித்துள்ளேன்.

அந்தியூர் சட்ட மன்ற தொகுதி விவகாரம் தொடர்பாக ஆடியோ வெளியிடப்படும், அப்போது துரோகம் என என்னை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் அவருக்கு இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசுகிறார். எடப்பாடி கோடநாடு குறித்து ஏன் இதுவரை எதுவும் சொல்லவில்லை, பல்வேறு கொலை குற்றங்களுக்காக குரல் கொடுக்கவில்லை

என்னை நீக்க என்ன காரணம் என ஆராய்ந்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளேன், துரோகம் செய்வதில் நோபல் பரிசை கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கே கொடுக்க வேண்டும், தற்காலிக பொதுச்செயலாளர்தான் எடப்பாடி பழனிச்சாமி என செங்கோட்டையன் பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version