Close Menu
    What's Hot

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»த.வெ.க. கூட்டணிக்கு அழைப்பு விடுத்த செங்கோட்டையன்!. டிடிவி தினகரனின் பதில் இதுதான்!
    தமிழ்நாடு

    த.வெ.க. கூட்டணிக்கு அழைப்பு விடுத்த செங்கோட்டையன்!. டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

    Editor web3By Editor web3December 7, 2025Updated:December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைவார்கள் என கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்திருந்தார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய செங்கோட்டையன், இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என டிடிவி, ஓபிஎஸ்க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த பதிலால் டிடிவி, ஓபிஎஸ் உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.

    இந்தநிலையில், கூட்டணி குறித்து அமமுக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெளிவுபடுத்தினார். வரவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார். கூட்டணி குறித்து அமமுக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், கூட்டணியை தலைமையேற்று நடத்துகிற சில கட்சிகள் தங்கள் கட்சியை அணுகி பேசி வருவதாகவும், முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தத் தேர்தலில் நான்கு முனை போட்டிதான் இருக்கும் என்று கணித்த தினகரன், தற்போது அமமுகவை கூட்டணிக்கு அணுகி வருவது குறித்து மறைமுகமாக பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று உணர்ந்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

    அவர் குறிப்பிட்டுள்ள உறுதியான கூட்டணிகளில், ஆளும் தி.மு.க. கூட்டணி, என்.டி.ஏ. கூட்டணி, தனித்துப் போட்டியிடும் சீமான் மற்றும் விஜய் தலைமையிலான ஒரு வலுவான கூட்டணி அமையும் என்ற செய்திகள் வருவதாக சுட்டிக்காட்டினார். இதன் மூலம், த.வெ.க. தலைமையில் ஒரு வலுவான அணி உருவாகி வருவதை அவர் உறுதிப்படுத்தினாலும், அதில் அமமுக சேருவது குறித்து தற்போது எந்த உறுதிப்பாட்டையும் டிடிவி தினகரன் அளிக்கவில்லை.

    alliance ammk Sengottaiyan ttv dhinakaran TVK Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நட்பை தாண்டி சென்ற உறவு”!. ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி ஜோடி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு..!!
    Next Article திருமணத்தை நிறுத்திய ஸ்மிருதி மந்தனா!. அவரே வெளியிட்ட பதிவு!. ரசிகர்கள் அதிர்ச்சி!.
    Editor web3
    • Website

    Related Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.