Close Menu
    What's Hot

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
    தமிழ்நாடு

    2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

    Editor web1By Editor web1June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 03 at 11.14.59 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரு வேறு இடங்களில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த மணி என்ற கூலி தொழிலாளி சிறுமியை காவல் நிலையம் அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில் சிறுமிக்கு மணி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதையடுத்து அவர்கள் மணியை தேடி உள்ளனர். அவர் கிடைக்காத சூழ்நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலையில் மணியை கண்டுபிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதேபோல் குமாரபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு அவரது உறவினரின் மூன்றரை வயது  பெண் குழந்தை சென்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு உடலில் தொந்தரவு இருந்ததையடுத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் ரீதியாக குழந்தை துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணையில், வரதராஜ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதனிடையே கைதானவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, காவல்நிலையம் முன்பு திரண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரசத்தில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎல்லா சாமானியனும் தனி விமானத்தில் பயணிக்க முடியுமா? – முதலமைச்சருக்கு கொங்கு ஈஸ்வரன் கேள்வி.
    Next Article டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்
    Editor web1
    • Website

    Related Posts

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    July 21, 2026

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    July 21, 2026

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.