திருவண்ணாமலை அருகே கர்ப்பிணிப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தவெக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் ஒருவர், இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் யோகேஸ்வரன், அப்பெண்ணை மிரட்டி தனது விருப்பத்திற்கு இணங்கும்படி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் கர்ப்பிணி பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டிற்கு வந்து தனது உறவினர்களிடம் அந்தப் பெண் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாலியல் தொல்லை  கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கர்ப்பிணி பெண் கொடுத்த புகாரின் பெயரில் தவெக பிரமுகர் யோகேஸ்வரனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிறகு சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version