சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்த சூழலில் தங்கம் விலை நேற்று முன் தினம்  கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ. 1,08,800-க்கும் விற்பனையானது

நேற்று காலையும் உயர்ந்த தங்கம் விலை, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில், ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்று, தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று காலையில் விலை அதிகரித்து, மாலையில் சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏறுமுகமாக இருப்பது நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் இந்த விலை உயர்விற்கு சர்வதேசச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றால் உலகச் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்து வருவதால், வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version