சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13-லிருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பத்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் மீதான கலால் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையை ஓரளவிற்கு ஈடுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரிக்குறைப்பு பொதுமக்களுக்கு உடனடி விலைக் குறைப்பைத் தராது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக வரி குறைந்தால் விற்பனை விலை குறைய வேண்டும், ஆனால் தற்போதைய சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தைச் சரிகட்டவே அரசின் இந்த வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

தற்போதைய நிலையில் இந்த வரிக்குறைப்பு ஒரு “விலை நிலைப்படுத்தும்”  நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கவிருந்த மிகப்பெரிய நஷ்டத்தை இந்த வரி விலக்கு ஈடுகட்டுவதால், வரவிருக்கும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் உயர்த்தாமல் தள்ளிப்போட நிறுவனங்களுக்கு இது வழிவகுக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version