Close Menu
    What's Hot

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முகத்திலே புன்னகை; அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை நல்லக்கண்ணு!. முதல்வர் ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    முகத்திலே புன்னகை; அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை நல்லக்கண்ணு!. முதல்வர் ஸ்டாலின்!

    Editor web3By Editor web3February 25, 2026Updated:February 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nallakannu stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (101) வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,  எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் – தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

    நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!

    சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் –

    “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத்
    தூக்கினில் ஏற்றினாலும்
    விட்டுப்பிரியாது – செங்கொடி
    வீரம் குறையாது”

    என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.

    கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்!

    முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.

    பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.

    முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!

    எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.

    தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!

    “தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது.

    தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

    மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!

    CPI Leader Nallakannu Nallakannu Death News R. Nallakannu நல்லக்கண்ணு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘மாணவர்களின் கல்விக்காக’!. சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தோழர் நல்லக்கண்ணுவின் உடல் தானம்!
    Next Article நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!
    Editor web3
    • Website

    Related Posts

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    June 10, 2026

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    June 10, 2026

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.