தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை தலைமை தபால் நிலையத்திலிருந்து, தமிழக முதல்வர் விஜய்யின் பனையூர் அலுவலக முகவரிக்கு ஒரு பார்சலை பெரியார் மணி அனுப்பினார். அந்த பார்சலுக்குள் ஒரு செவித்திறன் கருவி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய பெரியார் மணி, கடந்த சில காலங்களாக மாநிலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலைக் குற்றங்கள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் உரிய விளக்கமோ அல்லது பதிலோ அளிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளும், மக்களின் கோரிக்கைகளும் முதல்வரின் காதுகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருவியை ஒரு குறியீடாக அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது முதன்மையான கோரிக்கை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version