விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், பணிக்கு வந்துள்ள மற்ற அர்ச்சகர்கள் கணேசன், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தி ஆபாசமாக ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று 3 அர்ச்சர்கள் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் அர்ச்சர்களை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். மேலும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள் மேலும் இதனைத் தொடர்ந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த கோயிலில் பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் அரைநிர்வாணத்தில் ஆபாச நடனம் ஆடுவதும் மதுபோதையில் அட்டூழியங்கள் செய்வதும் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதும் உள்ளிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கும் சமயத்தில் இந்தக் கோவிலின் அர்ச்சகர்கள் செய்யும் அட்டூழியம் தற்போது வெளியான இந்த வீடியோவால் பக்தர்கள் கொந்திளிப்பில் உள்ளனர். கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஏன் கண்டு கொள்ளவில்லை கோவிலில் சிசிடிவி கேமராக்களை பார்த்து இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்விகள் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version