தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இன்று( ஏப்ரல் 21 ) முதல் ஏப்ரல் 26 வரை அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். இதனைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்துச் சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆம்னி பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை செய்வார்கள் என்றும், விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதி (Permit) ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரித்துள்ளது.
புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு:
பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க, மண்டல வாரியாகப் புகார் எண்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பயணிகள் வாட்ஸ்அப் (WhatsApp), குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு மூலமாகப் புகார்களைத் தெரிவிக்கலாம்.
புகார் எண்கள்:
-
தலைமையகம் (சென்னை): 1800 425 6151 (கட்டணமில்லா எண்)
-
சென்னை (வடக்கு): 99442 53404
-
சென்னை (தெற்கு): 97905 50052
-
மதுரை: 90953 66394
-
கோயம்புத்தூர்: 91235 93971
-
திருச்சிராப்பள்ளி: 90660 32343
-
சேலம்: 78456 36423
-
திருநெல்வேலி: 96981 18011
மேலும் விழுப்புரம் (96773 98825), வேலூர் (98400 23011), ஈரோடு (80569 40040), விருதுநகர் (90257 23800) மற்றும் தஞ்சாவூர் (95850 20865) ஆகிய பகுதிகளுக்கும் தனித்தனி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
