Close Menu
    What's Hot

    கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கவின் ஆணவக் கொலை வழக்கு… அழுது கொண்டே நீதிமன்றத்தில் சுர்ஜித் ஆஜர்…
    தமிழ்நாடு

    கவின் ஆணவக் கொலை வழக்கு… அழுது கொண்டே நீதிமன்றத்தில் சுர்ஜித் ஆஜர்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025Updated:August 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கவின் ஆணவக் கொலை வழக்கில், குற்றவாளி சுர்ஜித் அழுதுகொண்டே நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்ற 27 வயது நபர், சென்னை ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில், அதேப் பகுதியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளும் சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரை கவின் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது பிடிக்காததால், சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அவரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து போலீசார் சுர்ஜித், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தாயார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் நெல்லை இரண்டாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த போது, சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவனன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது சுர்ஜித் அழுதுகொண்டே நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்ட நிலையில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருத்தாசலம் : நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்த ஆட்டோ… 5-வயது சிறுவன் உயிரிழப்பு…
    Next Article ஊபர் செயலி மூலம் சென்னை மெட்ரோவில் டிக்கெட் எடுக்கலாம்… புதிய வசதியால் பயணிகள் மகிழ்ச்சி…
    Editor TN Talks

    Related Posts

    இன்றைய தங்கம் விலை என்ன?. லேட்டஸ்ட் அப்டேட் இதோ!.

    December 24, 2025

    குழப்பத்தில் முடிந்த அதிமுக-பாஜக மீட்டிங்! ஓ.பி.எஸ் வைத்த பெரிய டிவிஸ்ட்..!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    Trending Posts

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    December 24, 2025

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.