Close Menu
    What's Hot

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

    Editor web1By Editor web1December 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்தநிலையில் தீபம் ஏற்றப்படாததால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.

    இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,  திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தது. இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நிதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். விசாரணைக்குப் பிறகு, இன்று (டிச. 4) இரவுக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்றி, அதற்கான அறிக்கையை நாளை (டிச. 5) தாக்கல் செய்ய வேண்டுமென்று மதுரை காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், இரவுக்குள் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

    இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பது தான் பிரச்னை என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் சட்டப் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனிடையே இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் ராம ரவிக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி வந்தார் புதின்.. மோடி கட்டியணைத்து வரவேற்பு
    Next Article “திருப்பரங்குன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தாமல் பதற்றம் உருவாக்குகிறது திமுக அரசு” – இபிஎஸ்
    Editor web1
    • Website

    Related Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.