சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ சூழ்ச்சியை முயற்சிக்கின்றனர் ஆனால் அது என்றுமே தமிழகத்தில் வெற்றி பெறாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில், நேற்று ”அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா -2025” என்ற நிகழ்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒன்றிய பாசிச அரசு, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்ய முயற்சிக்கிறார்கள்; அவர்களின் முயற்சி என்றைக்கும் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது” என்றார்.

கிறிஸ்துமஸ் அன்று இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து கேக் அனுப்புவோம், ரம்ஜான் அன்று பிரியாணி வந்து விட்டதா என்று பார்ப்போம்; இதுதான் தமிநாட்டின் தனித்துவம். தமிழ்நாட்டுக்கு தனி கேரக்டர் இருக்கிறது”  என்று பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version